2026 மே 07, வியாழக்கிழமை

கொள்ளைச் சம்பவங்களால் காத்தான்குடி மக்கள் பீதி: என்.கே.றம்ழான்

Kogilavani   / 2013 ஜூன் 05 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பகுதியில் அடிக்கடி இடம்பெற்றுவரும் இரவுநேர கொள்ளைச் சம்பவங்களினால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் என்.கே.றம்ழான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடுகளில் கடந்த சில நாட்களாக கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
நள்ளிரவு வேளைகளில் இந்த கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.

நித்திரையில் இருப்பவர்களை மயக்கமடையச் செய்துவிட்டு தங்க நகைகள், பணம் என்பவை  கொள்ளையடிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் காத்தான்குடி பிரதேசத்தில் இவ்வாறு நடந்த கொள்ளைச் சம்பவம் ஒன்றில் கொள்ளையடிக்க சென்றவர்களினால் கைவிட்டு செல்லப்பட்ட கையடக்கத்தொலைபேசி ஒன்றை அந்த வீட்டு உரிமையாளர் கண்டெடுத்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தார்.

எனினும் இன்னும் இந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்; கைதுசெய்யப்படவில்லை.

பொலிஸார் இந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் துரித விசாரணை நடத்தி இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யவேண்டும்.

யுத்த காலத்தில் நடைபெறாத இத்தகைய சம்பவங்கள் இன்று சமாதானம் ஏற்பட்டுள்ள காலகட்டத்தில் நடப்பது மக்களிடையே பாரிய சந்தேகத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.

மிகச் சிறிய சம்பவங்களுக்கெல்லாம் துப்புத்துலக்கி அவைகளை ஆராயும் பாதுகாப்புத்துறையினர் இவ்வாறான மிகப் பெரிய குற்றச்செயல்களை கண்டு பிடிப்பதில் ஏன் இவ்வளவு தாமதம் காட்டுகின்றனர்? என கேள்வி கேட்க விரும்புகிறேன்' என்று அவர் அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .