2026 மே 07, வியாழக்கிழமை

சேக்கிழார் குருபூசை தினம்

Kogilavani   / 2013 ஜூன் 10 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்
, ஆர்.ருத்ரன்

வாழைச்சேனை,  புதுக்குடியிருப்பு சேக்கிழார் அறநெறிப் பாடசாலையினரின் ஏற்பாட்டில், சேக்கிழார் குருபூசை தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை புதுக்குடியிருப்பு சக்தி பாலர் பாடசாலையில் நடத்தப்பட்டது.

அறநெறிப் படசாலை அதிபர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், நாடாhளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், விஞ்ஞானப் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் எஸ்.தர்மபாலன், புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய குருக்கள் சிவஸ்ரீ.சிவரேகன் சர்மா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சேக்கிழார் குருபூசை தினத்தையொட்டி, கோறளைப்பற்று பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட சகல அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் ஆன்மீக போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இதன்போது பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

240 மாணவர்கள் அறக்கல்வி பயின்று வருகின்ற இப்பாடசாலை எதிர்வரும் 2014ஆம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0

  • sabeshan Monday, 10 June 2013 04:53 PM

    அறம் செய்ய விரும்புவோம். இதன் பொருளை மாணவர்கள் உணரும்படியாக கற்பித்தல் வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .