2026 மே 09, சனிக்கிழமை

குடும்பத்தை கடத்திய அறுவருக்கும் பிணை

Kogilavani   / 2013 ஜூன் 14 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

நாலுபேர் கொண்ட குடும்பத்தை வெள்ளை வானில் கடத்திய கும்பலைச் சேர்ந்த ஆறு பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் இன்று வெள்ளிக்கிழமை  விடுவித்துள்ளது.

துன்மன்கேணியிலிருந்து தாய், தந்தை மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளை கடத்திய சந்தேகத்தில் நேற்றைய தினம் 6 பேர் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவேளை இவர்களை எதிர்வரும் ஜுலை 16ஆம் திகதி ஆஜராகும்படி உத்தரவிட்டதுடன், ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்ச ரூபா சரீரப்பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி

குடும்பத்தை கடத்திய கும்பல் கைது

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .