2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

சிறுமியை இழுத்துசெல்ல முயன்ற முதியவர் மடக்கிபிடிப்பு

Super User   / 2013 ஜூலை 03 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன், எஸ்.எம்.எம்.முர்ஷித்

சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றதாக கூறப்படும்  55 வயதுடைய நபரொவருரை அப்பகுதி பொதுமக்கள் மடக்கிப் பிடித்து வாழைச்சேனை பொலிஸில் இன்று புதன்கிழமை ஒப்படைத்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள தியாவட்டவானிலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பம் பற்றி தெரியவருவதாவது,

ஏழு வயதான சிறுமி பாடசாலைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் அவ்வீதியால் வந்த 55 வயதுடைய நபரொருவர்; பின் பக்கமாக வந்து சிறுமியின் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல முயற்சித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த குறித்த சிறுமி கூச்சலிட்டவே அச்சிறுமியை விட்டுவிட்டு அவர் ஓட்டமெடுத்துள்ளார். சிறுமியின் கூக்குரல் கேட்ட அக்கம் பக்கத்தவர்கள் விரைந்துவந்து குறித்த நபரை மடக்கி பிடித்து வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .