2026 மே 14, வியாழக்கிழமை

dd

பூகோள தகவல் முறைமை தொடர்பான பிரயோகப் பயிற்சி

Kogilavani   / 2013 ஜூலை 09 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பூகோள தகவல் முறைமை தொடர்பிலான பிரயோகப் பயிற்சி ஒன்று நேற்று திங்கட்கிழமை (8) மட்டக்களப்பு மாவட்ட செயலக கணனி ஆய்வு கூடத்தில் இடம்பெற்றது.

உலக வங்கியின் நிதியுதவியில் நடைமுறைப்படுத்தப்படும் இத் திட்டத்தில் மண்முனை வடக்கு, போரதீவுப் பற்று, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, காத்தான்குடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராசா தலைமையில் இடம்பெற்ற இப் பயிற்சி நெறியில் பூகோள முறைமையில் விசேட நிபுணர்களான எஸ்.சசிதரன், நிலுக்க, பி.தேவ சஞ்சீவ ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு பயிற்சிகளை வளங்கினர்.

3 நாட்கள் நடைபெறவுள்ள இப் பயிற்சி நெறியில் திணைக்களத் தலைவர்கள், மாவட்ட செயலக பட்டதாரி பயிலுனர்கள் கலந்துகொண்டனர்.

இப் பூகோள முறைமை பயன்படுத்துதல் மூலம் அந்தப் பிரதேசத்தின் உட்கட்டமைப்புத் தகவல்கள், அனர்த்த அபாய தகவல்கள், உள்ளீடு செய்தல் மூலம் எதிர்காலத்தில் அனர்த்த நிலைமைகளின் போது விரைவாக மக்களை பாதுகாக்கக் கூடிய கட்டமைப்பிற்கு உதவியாக அமையவுள்ளது.

இலங்கையில் அனர்த்தத்திற்குள்ளாகும் மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாமிடத்தில் உள்ளமையினைக்  கருத்தில் கொண்டு உலக வங்கி முன்வந்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து இத் திட்டத்தினை மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்துகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .