2026 மே 14, வியாழக்கிழமை

நீர் மற்றும் மலசலக்கூட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜூலை 10 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்

நீர் மற்றும் மலசலக்கூட வசதிகள் அற்ற குடும்பங்களுக்கு அவ் வசதிகளை ஏற்படுத்திகொடுப்பதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவிலங்குத்துறை, பட்டிப்பளை, களுவாஞ்சிக்குடி, செங்கலடி, மண்முனை, வந்தாறுமூலை போன்ற பிரதேசங்களில் நீர் வசதிகள் மற்றும் மலசலகூட வசதிகள் அற்ற பொதுமக்களுக்கு அதனை மானியமாக அமைத்துக் கொடுக்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்படுள்ளன.

இதன் அடிப்படையில் யு எஸ் எயிட் அமைப்பின் 6 கோடி நிதியின் மூலம் பாம்பவுண்டேசன் அமைப்பினூடாக இச்செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினூடாக  நீர் வழங்களுக்காக 141 குடும்பங்களும் மலசலகூட வசதிகளுக்காக 230 குடும்பங்களும்  தெரிவு செய்யப்பட்டுள்ளன.

செயற்திட்டமானது பாம் பவுண்டோசன் அமைப்பின் பணிப்பாளர் சுனில் தம்பேபொலவின்  பணிப்பின் பேரில் திட்ட முகாமையாளர் பாலமுரளியின் வழிகாட்டலின் பேரில் சமூக ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவற்றுக்குரிய வேலைத் திட்டங்கள் நேற்று பட்டிப்பளை பிரதேசத்தில்  ஆரம்பிக்கப் பட்டுள்ளன. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .