2026 மே 14, வியாழக்கிழமை

dd

மட்டக்களப்பில் இளைஞர் வேலைத்திட்டம்

Kogilavani   / 2013 ஜூலை 12 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறுகைத்தொழில் நடவடிக்கையில் ஈடுபட எண்ணியுள்ள இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தினை கருத்தில்கொண்டு இலங்கை இளைஞர் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வர்த்த கைத்தொழில் சம்மேளனத்தின் அனுசரணையுடன் இதற்கான பணிகளை மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனம் மேற்கொண்டு வருகின்றது.

இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறு கைத்தொழிலாளர்களை அறிவுறுத்தும் கூட்டம் பல்நோக்கு சங்க மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சிதமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்கள், வங்கியாளர்கள், ஒப்பந்தக்காரர்கள் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .