2026 மே 14, வியாழக்கிழமை

dd

மயானத்திலிருந்து சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 ஜூலை 14 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சேருவில பொலிஸ் பிரிவிலுள்ள ஈச்சிலம்பற்று மயானத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இரத்தம் தோய்ந்த  நிலையிலேயே இந்த சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டதாக சேருவில பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்லடி கிராமத்தைச் சேர்ந்த பத்மநாதன் ரஜீப்காந்தன் (வயது-29) என்பவருடையது என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியதாக பிரிவுக் கிராமசேவையாளர் சித்திரவேல் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

சடலத்தின் அருகே எட்டு அடி மற்றும் இரண்டரை அடி நீளமான வெவ்வேறு கன அளவுள்ள இரும்புக் கம்பிகள் மீட்கப்பட்டதாகவும் கிராம சேவையாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .