2026 மே 14, வியாழக்கிழமை

dd

இலவச இருதய சிகிச்சை முகாம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 14 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரீ.எல்.ஜௌபர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் இலவச இருதய சிகிச்சை முகாமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகின்றது.

பாதுகாப்புப் படையின் கிழக்கு மாகாணத் தலைமையகத்தின் அனுசரணையுடன் காத்தான்குடி நகரசபை இந்த இலவச இருதய சிகிச்சை முகாமை நடத்திவருகின்றது.

காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெறுகின்ற இதற்கான நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா உட்பட கொழும்பு ஆசிரிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தியாவை சேர்ந்த இருதய சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் விவேக் குப்தா,  கொழும்பு ஆசிரிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவின் பணி;ப்பாளர் டாக்டர் அனில் பெரேரா, சத்திர சிகிச்சைப் பிரிவின் ஆலோசகர் டாக்டர் சித்திராங்கனி பெரேரா, டாக்டர் போல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வைத்திய சேவைகளை வழங்கி வருகின்றனர். 

இதன்போது இரத்த அழுத்த பரிசோதனை, உடல் பருமன் பரிசோதனை உள்ளிட்ட  வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .