2026 மே 14, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் கஞ்சாவுடன் ஐவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜூலை 15 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்   

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 5 பேர்  கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டதாக  காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

கஞ்சா பிடிக்கும் விசேட பொலிஸ் நாயின் உதவியுடன்  மேற்கொண்ட தேடுதலின்போதே இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.  இந்த சந்தேக நபர்களிடமிருந்து கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சாவுடன் சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை ஆஜர்படுத்தியபோது 5 சந்தேக நபர்களும் 62,000 ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .