2026 மே 14, வியாழக்கிழமை

வாகரையில் ஆதிவாசிகளுக்கு அன்பளிப்புப் பொருட்கள்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 15 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சன்குளம் கிராமத்தில் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த சுமார் 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளும் பணமும் உடைகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

கொழும்பைச் சேர்ந்த தொழில் அதிபரான அஜித் வீரசிங்ஹவின் 50ஆவது பிறந்ததினத்தை நினைவுகூர்ந்தே இந்த அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2,000 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதியும் 1,000 ரூபா பணமும் 2,000 ரூபா பெறுமதியான உடைகளும்  வழங்கப்பட்டதாகவும் ஆதிவாசி சமூகத்தினர் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .