2025 மே 05, திங்கட்கிழமை

விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளும் அவற்றைத் தீர்ப்பதற்கான அணுகுமுறைகளும் தொடர்பான கூட்டம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தினால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், வெள்ளம் வழிந்தோடுவதற்கு வழியமைத்தல் மற்றும் விளைநிலங்களுக்கான சரியான நீர்ப்பாய்ச்சலை ஏற்படுத்துதல் சம்பந்தமாக இதில் ஆராயப்பட்டன.

இதற்காக கித்துள் மற்றும் ஊறுகாமம் குளங்களை இணைத்தல், நீர்வடிகாலமைப்புப் பாதையை கொங்கிறீட் இட்டுச் செப்பனிடல் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை விவசாயிகள் முன்வைத்தனர்.

இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான செயல்முறைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என விவசாய நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ஐவன் சில்வா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X