2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கணவனை இழந்த பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கணவனை இழந்த பெண்களுக்கான  வாழ்வாதார உதவிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

கடந்தகால யுத்த சூழ்நிலையால் கணவன்மார்களை இழந்த 116 பேருக்கு இந்த வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியில் தையல் இயந்திரங்கள்;, மா அரைக்கும் இயந்திரங்கள்;, மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவை  வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  கணவனை இழந்த பெண்களின் வாழ்வாதாரத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு இருதயபுரம் கெத்செமனே கொஸ்பல் தேவாலயத்தில் அந்த தேவாலயத்தின் போதகர் பி.டபிள்யூ.மரியதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X