2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் முகவர்கள் மூவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாக ஆட்களை அனுப்பி வைப்பவர்கள் எனக் கருதப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து வந்த குற்றத்தடுப்புப் பிரிவினர்; நேற்று வியாழக்கிழமை மாலை இவர்களை கைதுசெய்துள்ளதாக  மட்டக்களப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூர் முகவர்களாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் திருகோணமலை, கோபாலபுரத்தைச் சேர்ந்த ஒருவரும் மட்டக்களப்பு எருவில் மற்றும் பெரியபோரதீவைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு மட்டக்களப்பிலிருந்து இவர்களை  இன்று அழைத்துச் செல்லவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏற்கெனவே சட்டவிரோதமாக கடல் வழிப் பயணத்தை மேற்கொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளவர்களும் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறியவர்களும்; கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .