2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

திகிலி வெட்டை கிராமத்தில் பாலர் பாடசாலை திறப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கோறளைப்பற்று பிரதேசத்திலுள்ள திகிலி வெட்டை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலர் பாடசாலைக் கட்டிடம் நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இந்த பாலர் பாடசாலை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனின் பத்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இப்பாலர் பாலர் பாடசாலை கட்டிடம் புனரமைக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சிஹாப்டீன் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் நடராஜா, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர், ஆலயபரிபாலன சபையினர், வித்தியாலயத்தின் அதிபர் உட்பட ஊர் மக்களும் கலந்து சிறப்பித்தார்கள்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X