2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மட். தேசிய கல்வியற் கல்லூரியில் விஞ்ஞான கண்காட்சி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு தேசிய கல்வியற்  கல்லூரியில் விஞ்ஞான செயன்முறை செயலமர்வு திட்டத்தின் கீழ் விஞ்ஞான
கண்காட்சியொன்று நேற்று நடைபெற்றது.

மட்டக்களப்பு தேசிய கல்வியற்; கல்லூரியின் 2ஆம் வருட கனித மற்றும் விஞ்ஞான ஆசிரிய மாணவர்களினால் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கல்விப் பொதுத்தராதர சாதரணதர மாணவர்களின் விஞ்ஞான பாடத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு இக்கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியினை மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் ஆரம்பித்து வைத்தார்.

இதில் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.ஜெயகுமார் உட்பட விரிவுரையாளர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இக்கண்காட்சியை மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியை அன்மித்துள்ள பாடசாலைகளின் கல்விப் பொதுத்தராதர சாதரணதர வகுப்பு மாணவர்கள் பார்வையிட்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X