2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மேய்ச்சல் தரைப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உறுதி

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில், கால்நடைகளுக்குரிய  மேய்ச்சல் தரைக்காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

கிழக்குமாகாண விவசாய அமைச்சர், காணி அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சரொருவர் விரைவில் விஜயம் மேற்கொண்டு இந்த பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாக ஆராயவுள்ளதாக உறுதியளித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரைக்காக ஒதுக்கப்பட்ட காணிகளில் அத்துமீறி விவசாயம் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தி கால்நடைகளுக்கான காணியை வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தல் வேண்டுமென கிழக்கு மாகாணத்தில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

கிழக்கு மாகாண சபையில் தன்னால் கொண்டுவரப்பட்ட தனிநபர் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதே இந்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த தனிநபர் பிரேரணை அவரச பிரேரணையாகவே மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

நீண்டகாலமாக இருந்து வரும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் கிழக்கு சபையில் அவரால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில் துரைரெட்ணம் கருத்துத் தெரிவிக்கையில், 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேசசெயலாளர்களினால்  வாகரை ,கிரான், செங்கலடி, வவுணதீவு, பட்டிப்பளை பிரதேசசெயலக பிரிவுகளில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் கால்நடைகள் இருக்கின்றன.

அந்த கால்நடைகள் மேய்வதற்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் மேய்ச்சல் தரைக் காணிகள்  ஒதுக்கப்பட்டுள்ளன. இக்காணிகள் பரம்பரை பரம்பரையாக மேய்ச்சல் தரையாக பாவிக்கப்பட்டு வந்துள்ளன. 

கடந்தகாலங்களில் அண்ணளவாக ஐம்பதாயிரம் ஏக்கருக்கு மேல் மேய்சல்தரைக் காணிகளை பயன்படுத்தி வந்தபோதும் குளங்களை பெரிதாக்குதல,; விவசாயச்செய்கைக்கு காணிகளை பயன்படுத்துதல் போன்றவற்றினால் மேய்ச்சல்தரைகாணிகள் குறைந்து வருகின்றன.
இதனால்  ஐந்து பிரதேசசெயலகப் பிரிவுகளில்  அண்ணளவாக 45 ஆயிரம் ஏக்கருக்கு  காணிகள் குறைக்கப்பட்டு கால்நடைகளுக்கு  ஒதுக்கப்பட்டதாக அறியமுடிக்கின்றது.

குறைத்து ஒதுக்கப்பட்ட காணிகளையும் எல்லைப் பகுதியிலுள்ள சிங்கள மக்கள் அத்துமீறி விவசாயச்செய்கைக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கால்நடைகள் வளர்ப்பிற்கு இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இவைமட்டுமின்றி அத்துமீறி விவசாயம்  செய்கின்றவர்களினால்  கால்நடைகள்   சுடப்படுவதும், கால் நடைகளை கட்டி வைத்து  பணம் பறிப்பதும், கால்நடைகளை களவாக எடுத்துச்செல்வதும்,  கால்நடை வளர்ப்போரை இப்பகுதிக்கு வரவேண்டாம் என பாதுகாப்புத்தரப்பினர் அச்சுறுத்தல் செய்வதும் தொடர்ந்து கொண்டே வருகின்றன.

 எனவே, இதை தடுத்து நிறுத்தி கால்நடை பண்ணையாளர்களை இப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவே இப் பிரேரணையைச் சபையில் கொண்டு வந்தேன்.

அதனடிப்படையில் விவசாய அமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், காணி அமைச்சர் விமல வீர திசாநாயக்க ஆகியோர் விஜயம் செய்து நேரடியாகப்பார்வையிட்டுத் தீர்வைப் பெற்றுத்தர உறுதியளித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X