2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர் ரவிவர்மனின் இறுதிக்கிரியைகள் இன்று

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

இயற்கையெய்திய தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளர் பரமக்குட்டி மகேந்திரராஜா (பி.ரவிவர்மன்)வின் இறுதி கிரியைகள் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.

கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சனிக்கிழமை இரவு இயற்கை எய்தினார்.

மட்டக்களப்பு- ஆரையம்பதியை பிறப்பிடமாக கொண்ட இவர், சரிநிகர் பத்திரிகையில் தனது ஊடக பணியை ஆரம்பித்து, பின்னர் தினக்குரல் பத்திரிகையில் தமது ஊடக பணியை தொடர்ந்தார்.

தினக்குரல் ஆசிரிய பீடத்தில் உதவி ஆசிரியராகக் கடமையாற்றிய இவர் பத்திரிகைத் துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதான 'சிறந்த பத்திரிகையாளருக்கான விருதை 2005' ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்டார்.

'அஜாசத்துரு' என்ற புனைபெயரில் பல அரசியல் கட்டுரைகளையும் 'துருவி' என்ற புனைபெயரில் அரசியல் அந்தரங்கங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.

'ரவிவர்மன்' என்ற புனை பெயரில் கவிதைகள், சிறுகதைகள் என பல இலக்கிய படைப்புகளை படைத்துள்ளார்.

'நெடுங்காலத்தின் பின்னொரு நாள்' என்ற சிறுகதைத் தொகுப்பையும் இவர் வெளியிட்டுள்ளார். மாணவப் பருவம் முதல் 'மது' என்ற புனைபெயரில்; பல இலக்கிய ஆக்கங்களை ஆக்கியுள்ளார்.  

அன்னாரது பூதவுடல் மட்டக்குளியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்றையதினம் வைக்கப்பட்டிருந்து பின்னர்  நேற்று மாலை மட்டக்களப்புக்கு எடுத்துசெல்லப்பட்டது.

இன்று திங்கட்கிழமை மாலை இவரது பிறப்பிடமான மட்டக்களப்பு-ஆரையம்பதியில் இறுதிக்கிரிகைகள் நடைபெறவுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X