2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வீட்டுத் தோட்டத்திற்கான பொருட்கள் விநியோகம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான பொருட்களை  முஸ்லிம் எய்ட் நிறுவனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கியது.

ஏறாவூர் மீராகேணி, மிச்நகர், ஐயங்கேணி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 21 குடும்பங்களுக்கு வீட்டுத் தோட்டத்திற்குத் தேவையான பயிர்ச் செய்கை உபகரணங்கள், பயிர் விதைகள் மற்றும் பழக்கன்றுகள் வழங்கப்பட்டன.

உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டத்திற்குத் தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.

ஏறாவூர் சத்தாம் ஹுஸைன் கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா உத்தியோகத்தர் பஸ்லான் தாஸீம், உணவு பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எல்.றமீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .