2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத செயற்பாடுகளால் எழிலை இழக்கும் பாசிக்குடா

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


இலங்கையின் உல்லாசத்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிவரும் பாசிக்குடா சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக அழிவடைந்து வருவதாக அப்பகுதிக்கு விஜயம்மேற்கொண்ட அதிகாரிகள் குழு அறிவித்துள்ளது.

பாசிக்குடா கடற்கரை பிரதேசத்தை அண்டிய பகுதிகளில் திட்;டமிட்டு மேற்கொள்ளப்படும் காடழிப்பு, அங்கிருக்கும் தோணாவை அடைத்து கட்டிடம் அமைத்தல், கண்டல் தாவரங்களை அழித்துவருவது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளினால் பாசிக்குடா தனது எழிலை இழந்து அழிவடையத் தொடங்கியுள்ளதாக உல்லாச பயணிகள் விசனம் தெரிவித்தனர்.

இதற்கமைவாக, குறித்த சட்டவிரோத நடவடிக்கைகளை பாரிiயிடவென மட்டக்களப்பு மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களம் மாவட்ட அதிகாரிகளுடன் பாசிக்குடாவிற்கான கள விஜயமொன்றை கடந்த சனிக்கிழமை (5) மேற்கொண்டிருந்தது.

இதில் பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி சபைகளின் அதிகாரிகள், கடற்றொழில் திணைக்களம் உட்பட பல அரச நிறுவன அதிகாரிகள்  அடங்கியிருந்தனர்.

இக்குழுவின் விஜயத்தை தொடர்ந்து, இப் பிரச்சினை குறித்து மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்திலும் மாவட்ட அரசாங்க அதிபாரிடமும் முறையிடப்படுமென மாவட்ட கரையோரம் பேணும் திணைக்கள மாவட்ட திட்ட முகாமையாளர் கே.கோகுலதீபன் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X