2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுக் கூட்டம் அந்த  மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது இந்த வருடத்திற்கான நிதியொதுக்கீடு, அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள், மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

'திவிநெகும' வேலைத்திட்டம் தொடர்பிலும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக்  கூட்டத்தில் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத், மீள்குடியேற்றப்  பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X