2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கித்துள் உறுகாமம் இணைப்புத்திட்டம் தொடர்பாக ஆராய்வு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கித்துள் உறுகாமம் குளங்களின் இணைப்புத் திட்ட அமுல்படுத்தலின் போது ஏற்படவுள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயும் உயர் மட்ட கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை பகல் மட்டக்களப்பு மாவட்ட செலயகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில், மீள்குடியேற்றப்பிரதி அமைச்சர் வி.முரளிதரன் கலந்துகொண்டார்.

அதேநேரம், நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் ஐவன் சில்வா, மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் காமினி ராஜகருணா, ஆசிய அபிவிருத்தி வங்கியின் சூழல் இயற்கை வழங்கள் விவசாயப்பிரிவு பிரதிநிதி மஞ்சுள அமரசிங்க, நீர்வழங்கல் சிறப்பு நிபுணர் லான்ஸ் டப்ளியூ கொரே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கித்துள் மற்றும் உறுகாமம் ஆகிய இரு குளங்களையும் இணைக்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி வழங்கவுள்ளது.

மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் எடுத்த முயற்சியின் பயனாக, கடந்த வருடத்தின் ஜுன் மாதத்தில் நிPர்ப்பாசன அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டதனைத் தொடர்ந்து இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இத்திட்டத்திற்கென 2500 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முக்கிய குளங்களில் இரண்டான கித்துள் மற்றும் உறுகாமம் குளங்கள் இணைக்கப்படுவதன் மூலம் சுமார் 15ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மேலதிகமாக செய்கை பண்ணக்கூடிய வாய்ப்பு ஏற்படுவதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்படும் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகும் அமையும்.

இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்படும் வந்தாறுமூலை, சித்தாண்டி, கிரான், சந்திவெளி, மாவடிவேம்பு எனப் பல கிராமங்கள் பாதுகாக்கப்படும் சந்தர்ப்பம் உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் நன்மையடைவார்கள் என்ற வகையில் இத்திட்டம் எம்மால் முன்வைக்கப்பட்டது அதனை அமைச்சர் பார்வையிடுவது குறித்து மகிழ்ச்சியடைவதாக   மிள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதிகமான நிலங்கள் இன்னமும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலைமையில் மாற்றம் ஏற்படும். என்பதுடன் உற்பத்தித் துறையும் மேம்படும்.

உறுகாமம் குளத்தின் கொள்ளளவு 18,600 ஏக்கர் அடியாகும். கித்துள் குளத்தின் கொள்ளளவு 4200 ஏக்கர் அடியாகும். இரண்டும் இணைக்கப்படும் போது 95 மில்லியன் கனஅடி கொள்ளளவு உருவாகும் என நீரப்பாசன திணைக்களம் தெரிவித்தது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X