2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கைதி கூரையை விட்டு இறங்கினார்

Super User   / 2013 ஒக்டோபர் 07 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி நேற்று சனிக்கிழமை காலை முதல் உண்ணாவிரதம் இருந்த கைதி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கூரையை விட்டு கீழே இறங்கியதாக மட்டக்களப்பு சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அன்ரன் ஜெயராஜ் எனப்படும் இந்த கைதி தன்னை பொலநறுவை சிறைச்சாலைக்கு இடமாற்றக் கூடாது என கூறியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் இன்று மாலை 4.55 மணியளில் சிறைச்சாலையின் கூரையை விட்டு கீழே இறங்கியுள்ளார்.

மேற்படி கைதிக்கு 10 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவரை பொலனறுவை சிறைச்சாலைக்கு இடமாற்றுமாறு நீதிமன்றம் கோரியதற்கிணங்க நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை அவர் இடமாற்றப்பட இருந்தார்.

இந்த நிலையில் இவர் தன்னை இடமாற்றக் கூடாது எனக்கோரி இவர் கூரையின் மேல் ஏறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார்.

இவருக்கு எதிராக இன்னும் இரண்டு வழக்குகளிற்காக அடிக்கடி மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரவேண்டியிருந்தது. இதனால் இவரை பொலனறுவை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு நீதீமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X