2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திலும் டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம் மற்றும் டெங்கு பரிசோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ்; நேற்று பாடசாலைகள் மற்றும் பொது நிறுவனங்கள், வங்கிகள், வைத்தியசாலைகள் என்பவற்றில் டெங்கு பரிசோதனை நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் டெங்கு பற்றிய விழிப்புனர்வு பிரசாரங்களும் செய்யப்பட்டன.

காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவிலுள்ள வங்கிகள் மற்றும் பாடசாலைகள், வைத்தியசாலை என்பவற்றில் டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. 

காத்தான்குடி பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்த டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் மேற்பார்வையின் கீழ் இந்த டெங்கு விழிப்புனர்வு வேலைத்திட்டம் இடம்பெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X