2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'அலிகார் கல்லூரிக்கு ஏறாவூர் பழைய பொலிஸ் நிலைய காணி கிடைக்கும்'

Kogilavani   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'ஏறாவூரில் பழைய பொலிஸ் நிலையம் அமைந்திருந்த காணி அலிகார் தேசியக் கல்லூரிக்குக் கிடைக்கவிருக்கின்றது' என ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

அலிகார் தேசியக் கல்லூரியுடன் ஒட்டியதாக உள்ள இந்த பழைய பொலிஸ் நிலையக் காணியை அலிகார் தேசியக் கல்லூரிக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டிருந்தபோது தான் இந்த வேண்டுகோளை முன்வைத்திருந்ததாகவும் அதற்குரிய சாதகமான பதில் தற்போது கிடைத்துள்ளதாகவும் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

அலிகார் தேசியக் கல்லூரிக்கு காணி போதாமலிருப்பதாலும் இந்தத் தேசியக் கல்லூரிக்கருகில் பொலிஸ் நிலையம் அமைந்திருப்பது அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்ற நியாயமான காரணங்களின் அடிப்படையிலேயே தனது முயற்சி வெற்றியளித்திருப்பதாகவும் ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலானா மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X