2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சவுக்கு மரங்கள் வெட்டப்படுவதால் பாதிப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரங்களில் நடப்பட்டுள்ள சவுக்கு மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதால் சுனாமித் தாக்கம் அதிகரிப்பதுடன், சூழல் பாதிப்பும் கடலரிப்பு அபாயமும் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களத்தின் மாவட்ட திட்ட முகாமையாளர் கே.கோகுலதீபன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரங்களில் சூழல் பாதிப்பு, கடலரிப்பு மற்றும் சுனாமி தாக்கத்தைக் குறைக்க என  ஆயிரக்கணக்கான சவுக்கு மரங்கள் நடப்பட்டுள்ளன. இவ்வாறு நடப்பட்டுள்ள சவுக்கு மரங்களே சட்டவிரோதமாக  வெட்டப்படுகின்றன.

நாவலடி மற்றும் சவுக்கடி போன்ற இடங்களில் இரண்டு  கிலோமீற்றர் முதல் மூன்று கிலோமீற்றர் வரையான கரையேரப் பிரதேசங்களில் சவுக்கு மரங்கள் நடப்பட்டுள்ளன.

மேற்படி சவுக்கு மரங்கள் தினமும் சட்டவிரோதமாக வெட்டப்படுவதால் மீண்டும் அழிவுகளை சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட வன பரிபாலன திணைக்களம் மற்றும் சூழல் பிரிவினர் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .