2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

டெங்குநுளம்புகள் பெருகுவதற்கு காரணமாக இருந்த இருவர் மீது சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, ஆரையம்பதிப் பிரதேசத்தில் டெங்குநுளம்புகள் பெருக்குவதற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் இருவர்  மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆரையம்பதி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.எம்.பசீர் தெரிவித்தார்.

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ஆரையம்பதிப் பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்போது இரு இடங்களில் டெங்குநுளம்புகள் பெருக்குவதற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் இருவர் மீது  சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

ஆரையம்பதி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, டாக்டர் திருமதி பாமினி அச்சுதனின் வழிகாட்டலிலும் ஆலோசனையின் பேரிலும் காத்தான்குடி பொலிஸாருடன் இணைந்து பொதுச்சுகாதார பரிசோதகர்கள் டெங்குநுளம்புகள் பெருகும் இடங்களில் சோதனைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி அரசாங்க மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளிட்டவைகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.

அத்துடன், டெங்கு தொடர்பான விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .