2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இலுப்படிச்சேனையில் பனம்பொருள் உற்பத்தி பயிற்சி நிலையம் திறப்பு

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


யுத்தம் காரணமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இலுப்படிச்சேனை கிராமத்தில், பனம்பொருள் உற்பத்திப் பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இதேநேரம், ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தினால் இக்கிராமத்தில் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் சுயதொழில், உபகரணங்கள், உள்ளீடுகளும் வழங்கப்பட்டன.

வாழ்வாக்தாரத்திட்டத்தில். 30 குடும்பங்களுக்கு சுயதொழில்களை மேற்கொள்வதற்கான உபகரணங்கள், பொருள்கள், மற்றும் ஆடு, கோழி வளர்ப்புக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை பகல் பனம் பொருள் உற்பத்தி பயிற்சி நிலையம் ஒன்று மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் திறந்து வைக்கப்பட்டது.

பனம்பொருள் அபிவிருத்தி சபையின் வழிநடத்தலில் நடைபெறும் இப்பயிற்சி நிலையத்தில் சுற்றுலாப் பிரயாணிகளைக் கவரும் வகையிலான பனம்பொருள் உற்பத்திகள் தயாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X