2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தை இடமாற்ற முயற்சி

Super User   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் நகரில் உள்ள பொலிஸ் நிலையத்தை வேறொரு இடத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏறாவூர் எல்லை வீதியிலுள்ள பழைய சிங்கள மகா வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள காணியில் புதிய பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு உத்தேசித்திக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் நகர சபைக்குச் சொந்தமான இந்த காணியை கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கடந்த சனிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

உத்தேச காணியில் புதிய பொலிஸ் நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூற்று அறிக்கையையும் இட அமைவின் முக்கியத்துவத்தையும்  பற்றிய முழு விவர அறிக்கையை உடன் சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காஞ்சன கொடகும்பர விற்கு உத்தரவிட்டார்.

ஏறாவூரில் தற்போது பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணி அலிகார் தேசியக் கல்லூரிக்குக் வழங்கப்படவுள்ளது என ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X