2025 மே 03, சனிக்கிழமை

இலக்கிய விழாவை முன்னிட்டு கண்காட்சி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்ட கலை இலக்கிய விழாவை முன்னிட்டு இம்மாதம் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் நடைபெறவுள்ளது.

உள்ளுர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், உள்ளுர் அறிவுத்திறனை வளர்த்தெடுக்கும் செயற்திட்டத்திலும் மாவட்ட செயலகம் 'கைவினை உள்ளுர் உற்பத்திறன்' என்ற தொனிப்பொருளில் இந்த கண்காட்சியையும் விற்பனையை நடத்துவதாக மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் தெரிவித்தார்.

கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் 25ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ள.

இதனையடுத்து தினமும் பிற்பகல் 2.30 முதல் இரவு 8.30 மணிவரை இக்கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறும்.
இக் கைவினைப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளையும் சேர்ந்த கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள், அமைப்புக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பங்கு கொள்ளவுள்ளனர்.

இவர்களுக்கென 18 காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், மாவட்டத்தின் பனை, பன், தென்னை, மரம் உள்ளிட்டவற்றினால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருள்கள், மற்றும் அலங்காரப்பொருள்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X