2025 மே 03, சனிக்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் சந்தேகத்தின்பேரில் கைதான மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள மூன்று சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்தார் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் சமுர்த்தி முகாமையாளருமான ஒருவர் மீது காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக மேற்படி நபர் திங்கட்கிழமை காத்தான்குடி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை (29) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

பிரத்தியேக வகுப்புக்கு சென்ற சிறுவர்களையே இவர் துஷ்பிரயோகம் செய்ததாகவும் தொடர்ந்து இவர் இப்படியான செயலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டதாரி பயிலுனர்களுக்காக அண்மையில் வழங்கப்பட்ட சமுர்த்தி முகாமையாளர் நியமனத்தின் மூலம் இவர் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி முகாமையாளராக நியமிக்கப்பட்டு அங்கு கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X