2025 மே 03, சனிக்கிழமை

தடை செய்யப்பட்ட வலைகள் மீட்பு

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 29 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை, வாகனேரி குளம் அமைந்துள்ள பகுதியில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் ஒரு தொகுதி இன்று (29) பிற்பகல் கைப்பற்றப்பட்டன.

இப்பகுதியில் மிக நீண்டகாலமாக தடை செய்யபட்ட தங்கூசி வலைகளைக் கொண்டு மீன்பிடித் தொழிலில் சிலர் ஈடுபட்டு வருவதாக மீனவ சங்கத்தின் மூலம் தேசிய நீர் உயிரியல் வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்திற்கு கிடைத்த தகவலையடுத்து இன்று சட்ட விரோத வலைகள் கைப்பற்றப்பட்டன.

தேசிய நீர் உயிரியல் வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட விரிவாக்கல் பணிப்பாளர் திருமதி கே.பி.சி.புஸ்பலதா, மாவட்ட உத்தியோகத்தர் பி.பிரபாகரன், விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜே.நெல்ஷன், மீனவ சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோர் வாழைச்சேனை பொலிஸாரின் உதவியுடன் சட்ட விரோத தங்கூசி வலைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வலைகள் வாழைச்சேனை பொலஸாரால் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வலைகளைப் பாவித்த சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்பட வில்லை என்றும் அவர்கள் தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X