2025 மே 03, சனிக்கிழமை

வீட்டுத் தோட்டத்துக்கான பொருட்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு வீட்டுத் தோட்டத்திற்கான பொருட்களை முஸ்லிம் எயிட் நிறுவனம் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கிவைத்துள்ளது.

இதன்போது தம்பானம்வெளி, கொடுவாமடு,  காயான்குடா ஆகிய பகுதிகளைச்  சேர்ந்த 30 குடும்பங்களுக்கு இந்;த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12,500 ரூபா பெறுமதியான பொருட்கள்  வழங்கப்பட்டுள்ளன.

முட்கம்பி, மண்வெட்டி, விதை பொருட்கள், பழமரக் கன்றுகள், நீர்தெளி கருவிகள்  உட்பட வீட்டுத் தோட்டத்துக் தேவையான அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் எய்ட் மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி தெரிவித்தார்.

காயான்குடாவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர், உணவு பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எல்.றமீஸ், வாழ்வெழுச்சித் திட்ட உத்தியோகத்தர் ஆர்.சுதாகர், கிராம சேவையாளர் எஸ்.கோகுலராஜ் உட்பட   பலர்; கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X