2025 மே 03, சனிக்கிழமை

மேய்ச்சல் தரை காணி பிரச்சினை தொடர்பில் ஆராயா விசேட கூட்டம்

Super User   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மேய்ச்சல் தரை காணி பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடத்தப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அத்துமீறி விவசாயத்தில் ஈடுபடுவதனைத் தடுத்து இந்த மாவட்டத்தின் விவசாயப் பண்ணையாளர்கள் பாதிக்கப்படுவதனை நிறுத்த வேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் பிரேரணையொன்றை மாகாண சபையில் முன்வைத்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த விவாதத்தின் முடிவில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கூட்டமொன்றை வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்வதாக முதலமைச்சர் உறுதி வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செலயகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், கிழக்கு மாகாண காணி அமைச்சர் வீமலவிர திசாநாயக்க, மாகாண விவசாய அமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், அம்பாறை மாவட்ட செயலாளர் வன இலாகா பணிப்பாளர், வன விலங்குகள் ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X