2025 மே 02, வெள்ளிக்கிழமை

மேய்ச்சல் தரை நிலங்கள் தொடர்பான உயர் மட்ட கூட்டம்

Super User   / 2013 நவம்பர் 02 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மேய்ச்சல் தரை நிலங்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றை தீர்ப்பதற்கான உயர்மட்ட மாநாடு ஒன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பிரதியைமச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்களான விமலவீர திஸாநாயக்கா, ஹாபீஸ் நசீர் அகமட், எம்.எஸ்.உதுமாலெவ்வை, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்பரன், முன்னாள் முதலமச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாரம்பரிய மேய்ச்சல் தரை நிலங்களில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பலர் அத்துமீறி சட்டவிரோதமாக விவசாயம் செய்வதாகவும் இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாடுகளை மேய்ப்பதற்கு பன்னையாளர்கள் பிரச்சினைகளை சந்திப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு சட்டவிரோதமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்குள் அத்துமீறி  சட்டவிரோதமாக  விசாய செய்கையில் ஈடுபட்டு வரும் அம்பாறை மாவட்ட விசாயிகளை உடனடியாக வெளியேற்றவேண்டுமெனவுமம் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
 
இந்த விடயம் இங்கு விரிவாக ஆராயப்பட்டதுடன் இந்த இடங்களை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் சென்று பார்வையிட்ட பின்னர் அம்பாறை மாவட்ட செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட படை அதிகாரிகள் அடங்களாக ஒரு விரிவான கூட்டத்தை நடாத்தி இதற்கு தீர்வை கானுவது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X