2025 மே 02, வெள்ளிக்கிழமை

கூழவாடியில் இலவச வைத்திய முகாம்

Super User   / 2013 நவம்பர் 03 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கூழவாடியில் இலவச வைத்திய முகாமொன்று நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வைத்திய முகாமில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அக்குறாணை, குடும்பிமலை, மியான்கல்குளம், பொண்டுகள்சேனை மற்றும் பிரம்படித்தீவு போன்ற பல கிராம மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

கண், மூக்கு, பல், தொண்டை மற்றும் சரும வியாதிகளுக்கான சிகிச்சைகளும், எலும்பு முறிவுச் சிகிச்சைகளும்  விசேடமாக குழந்தைகளுக்கான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தோல் சிகிச்சை விசேட நிபுணர் என். தமிழ்வண்ணன் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X