2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தியேட்டர் மோகன் த.ம.வி.பு. கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

Kogilavani   / 2013 நவம்பர் 07 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தரும் தொழிலதிபருமான தியேட்டர் மோகன் அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் வியாழக்கிழமை (7) கூடிய மத்திய குழு கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தற்காலிக இடைநிறுத்தம் தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தியேட்டர் மோகன் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே கட்சியினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சிவட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடர்பில் தியேட்டர் மோகனை தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் அவரது தொடர்பை பெறமுடியவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .