2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் அதிவேக தபால் சேவை

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 07 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்,ரி.எல்.ஜவ்பர்கான், எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிவேக தபால் சேவை இன்று வியாழக்கிழமையிலிருந்து   ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிரதம அஞ்சல் அலுவலகத்தில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வாசுகி அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் சிரேஷ்ட நிர்வாகச் செயலாளர் கே.கணகசுந்தரம்,  மட்டக்களப்பு பிரதம தபால் அத்தியட்சகர் ஏ.எம்.ஜிப்ரி,  மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.கலீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது முதலாவது அதிவேக தபாலை மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.கலீல், கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபரிடம் வழங்கி இந்தச் சேவையை ஆரம்பித்து வைத்துள்ளார். இதேவேளை, வாழைச்சேனை அஞ்சல் நிலையத்திலும் உள்நாட்டு அதிவேக சேவை  இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .