2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மத்தியஸ்த சபைக்கு தெரிவான உறுப்பினர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு

Kanagaraj   / 2013 நவம்பர் 09 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி  மத்தியஸ்த சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் இவர்களுக்கான நியமனக்கடிதங்களை நேற்று வழங்கி வைத்தார்.

காத்தான்குடி  மத்தியஸ்த சபையின் தலைவர் எம்.ஐ.எம்.உசனார் தலைமையில்; காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் அஸ் ஸஹீத் அகமது லெவ்வை மண்டபத்தில் இந்த வைபவம் நடைபெற்றது.

 இந்த வைபவத்தில் காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க, காத்தான்குடி ஹாதி நீதிபதி மௌலவி எஸ்எம்.அலியார், காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.ரி.ஹாலித், சம்மேள பிரதி தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் உட்பட உலமாக்கள், முக்கியஸ்த்தர்கள், சட்டத்தரணிகள் மத்தியஸ்த சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி  மத்தியஸ்த சபையின் தலைவர் மற்றும் அதன் பிரதி தலைவர் உட்பட 40 உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.

இச் சபையின் தலைவராக எம்.ஐ.எம்.உசனார் மற்றும் பிரதி தலைவராக மௌலவி எஸ்.எச்.எம்.றமீஸ் ஜமாலியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உரை


இங்கு உரையாற்றிய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்அப்துல்லாஹ் மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி என்பது கத்தி போன்றதாகும் இதை நல்லதுக்கும் பயன் படுத்த முடியும். அதற்கு அப்பாலும் பயன் படுத்தமுடியும்.

இந்த மத்தியஸ்த சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் சமூகத்தில் சிறந்தவர்கள் அந்த கத்தி நமது கழுத்துக்கும் சில வேளைகளில் வந்து விடும் என்பதை நினைத்து செயற்பட வேண்டும்.

மத்தியஸ்த சபைக்கு வருகின்றவர்கள் திருப்தியை நாடி வருகின்றனர் பிணக்குகளை தீர்த்துக் கொள்வதற்காக மத்தியஸ்த்த சபைக்கு வருகின்ற இருதரப்பினரையும் திருப்திப் படுத்தும் நடவடிக்கையையே மத்தியஸ்;த சபை மேற் கொள்ள வேண்டும்.

நீதிமன்றங்களில் கிடைக்கும் தீர்ப்பு ஒரு சாராரை திருப்திப் படுத்தக் கூடியதாக இருக்கலாம். ஆனால் மத்தியஸ்த்தசபையில் இருசாராரும் திருப்திப்படுகின்றனர். திருப்திப்படுத்தும் வேலையைத்தான் மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் மேற் கொள்கின்றனர்.

இறைவனின் திருப்தி என்பது முக்கியமானதாகும். அந்த இறைவனின் திருப்தியை நாடி மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

அமெரிக்காவில் சர்வதேச கைத்தொழில் பிணக்குகளை தீர்த்துக் கொள்வதற்காக இந்த மத்தியஸ்;த பொறிமுறை ஆரம்பிக்கப்பட்டது. இந்த மத்தியஸ்த சபை பொறிமுறை இன்று இலங்கையிலும் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .