2025 மே 02, வெள்ளிக்கிழமை

நாட்டைவிட்டு வெளியேறிய அரச ஊழியர்கள் மீண்டும் வேலையில் சேர்வதற்கான இறுதித்திகதி நீடிப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 11 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக  நாட்டை விட்டு வெளியேறிய அரசாங்க, உள்ளுராட்சி, கூட்டுத்தாபன ஊழியர்கள் மீண்டும் வேலையில் சேர்வதற்கான இறுதித்திகதி டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் பொதுநிர்வாக உள்ளுநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவை சந்தித்து விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,

1983ஆம் ஆண்டு ஜுலை மாதத்துக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய அரசாங்க, உள்ளுராட்சி, கூட்டுத்தாபன ஊழியர்களை மீண்டும் வேலையில் இணைத்துக்கொள்வது என 4ஃ2006 சுற்றுப்பிரகாரத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவை நேரடியாக சந்தித்து கலந்துரையாடி 2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிவரை இந்த காலஎல்லையினை நீடித்து தாருங்கள் என்ற கோரிக்கையினை முன்வைத்தேன்.

இந்த நாட்டில் 2009ஆண்டு மே மாதம் போர் முடிவுறுவதற்கு முன்னர் வெளிநாடு சென்று வேலையற்று இருந்த அரசாங்க ஊழியர்கள் தமது தொழிலை மீண்டும் பெறுவதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கிவந்தனர்.

இது தொடர்பில் 2009ஆண்டு மே மாதத்துக்கு பின்னர் நாடு திரும்பியவர்கள் என்னை சந்தித்து தங்களது தொழிலை மீண்டும் பெற்றுத்தருமாறு கோரியதையும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தேன்.

இது தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருந்தேன். எனினும் அமைச்சர் இது தொடர்பில் அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதன் அனுமதியுடன் கால நீடிப்பினை பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார்.

இது தொடர்பில் பொதுநிர்வாக உள்ளுநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்னவினால் 03௰௨013 நடைபெற்ற அமைச்சரவையில் கால நீடிப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அது தொடர்பில் அமைச்சர் எனக்கு தெரியப்படுத்தினார்.

இது தொடர்பான சுற்றுநிரூபங்கள் அமைச்சின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், கூட்டுத்தாபன தலைவர்கள் ஆகியோருக்கு பொதுநிர்வாக உள்ளுநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரின் கையெழுத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்' என்றார்.

மேலும், இந்த கால நீடிப்பு காரணமாக ஆயிரக்கணக்கானோர் மீண்டும் தமது தொழிலை பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  தொழிலை இழந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்குமாறும் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் தன்னுடன் தொடர்புகொள்ளுமாறும் நாடாளுமன்ற  உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .