2025 மே 02, வெள்ளிக்கிழமை

கலாசரா சீரழிவுகளை தடுப்பது தொடர்பில் ஆராய்வு

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படும் கலாசார சீரழிவுகள் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைலப் புலிகள் கட்சியின் பொதுச்சபை கூட்டத்தில் விசேட கவனம் செயலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலை;புலிகள் கட்சியின் பொதுச்சபை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (10) மட்டக்களப்பிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

கட்சியின் தலைவரும்;, ஜனாதிபதியின் ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட கட்சியின் முக்கியஸ்த்தர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படும் கலாசார சீரழிவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன் அதனை தடுப்பது தொடர்பில் உயர் அதிரிகாரிகள் மற்றும் மகளிர் அமைப்புகளுடன் கலந்துரையாடுவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட காணிகளில் மகாஓயா மற்றும் தெகித்தியகண்டி போன்ற இடங்களில் இருந்து பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தோர் அத்து மீறி குடியேறியுள்ளமை தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் இது தொடர்பாக உயரதிகாரிளுடன் கலந்துரையாடுவது என தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில்; விசேட அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான திட்ட மும்மொழிவுகளையும் அந்த மாவட்டங்களின் அமைப்பாளர்கள் முன் வைத்தததாகவும்  அது தொடர்பாகவும் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாகவும்  கட்சியின் செயலாளர் பிரசாந்தன் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .