2025 மே 02, வெள்ளிக்கிழமை

மர நடுகை நிகழ்வு

Kogilavani   / 2013 நவம்பர் 15 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையனால் நேற்று (14) பாடசாலைகளில் நீண்டகால பயன்தரும் நல்ல இன பழமரங்கள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பட்டிப்பளைக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட ஐந்து பாடசாலைகளில் இவ்வாறு பழமரங்கள் நடப்பட்டன.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின மட்டக்களப்பக் கிளைத் தலைவர் த.வசந்தராசா, கிளை நிறைவேற்று உத்தியோகஸ்தர் வி.பிறேம்குமார் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்துகொண்டு மரங்ளை நட்டுவைத்தனர்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பட்டிப்பளைக் கல்விக் கோட்டத்திற்குட்பட்ட நாற்பதுவட்டை விபுலானந்தா வித்தியாலயம், முதலைக்குடா மகாவித்தியாலயம், பண்டாரியாவெளி நாமகள் விதியாலயம், கடுக்காமுனை வாணி வித்தியாலயம், முனைக்காடு விபுலானந்தா வித்தியாலயம், ஆகிய பாடசாலைகளிலேயே இவ்வாறு பழமரங்கள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதில் மா, பலா, தோடை, போன்ற பல நீண்ட கால பயன்தரும் நல்லின பழமரங்கள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .