2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தூக்கில் தொங்கிய நிலையில் காட்டிலிருந்து சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 நவம்பர் 17 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் புனானை மயிலந்தன்னை காட்டுப் பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இனந்தெரியாத ஒருவரது சடலம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

மயிலந்தன்னைக் காட்டுப்பகுதியில் மாடு தேடிச் சென்ற இளைஞர் மரத்திரல் தொங்கப்பட்ட நிலையில் ஒருவரது சடலத்தைக் கண்டு வாழைச்சேனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்ப இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

கொலை செய்து தூக்கிலிடப்பட்டாரா அல்லது அவர் தூக்கில் தொங்கி மரணமானாரா என்று மரண மருத்துவ பரிசோதனை முடிவடைந்ததன் பின்னர்தான் தெரிவிக்க முடியும் என்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் கடந்த ஒருவாரத்திற்குள் நடைபெற்று இருக்கலாம் என்றும் இவர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லையென்றும் இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடாத்தி வருவதாகவும் வாழைச்சேகைன பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .