2025 மே 01, வியாழக்கிழமை

கச்சேரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,மாணிக்கப்போடி சசிகுமார்
, எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள முஸ்லிம்கள் சிலர் திங்கட்கிழமை (18) காலை மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளில் குடியேற விடுமாறு கோரியே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட கச்சேரிக்கு முன்னால் ஒன்று கூடிய இவர்கள் கச்சேரியின் பிரதான நுழை வாயிலை மூடி சுலோகங்களை தாங்கி கோசங்களை எழுப்பி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

'எமக்குரிய காணிகளை தாருங்கள்', 'எமது சொந்த காணிகளில் குடியேற அனுமதியுங்கள்' போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் திங்கட்கிழமை (18)  மாவட்ட கச்சேரியில் நடைபெறவுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

கடந்த மாத மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் நடைபெற இருந்தபோது மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள தமிழ் மக்கள் சிலர் தமது சவச்சாலை காணிகளை முஸ்லிம்கள் சிலர் அத்துமீறி பிடித்துள்ளதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .