2025 மே 01, வியாழக்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்--


வறுமைக்கோட்டின்கீழ் வாழும் பாடசாலை மாணவர்களுக்கு பாதணி வழங்கும் வைபவமும் சிறந்த இளைஞர்களுக்கான விருது வழங்கலும் காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய மண்டபத்தில் காத்தான்குடி பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜா முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வழிகாட்டலில் காத்தான்குடி இளைஞர் கழக சம்மேளத்தினால் குபா இளைஞர் கழகத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

'வெற்றிக்கான எங்கள் பணி' என்ற மகுடத்தின்கீழ் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தினூடாக பாடசாலை செல்லும் வறிய மாணவர்கள் பெரு நன்மையடைந்துள்ளனர்.

இந்நிகழ்வின் போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும்  இடம் பெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .