2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மட்டு. மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 18 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றுவருகின்றது.

இந்த அபிவிருத்திக்குழுக் கூட்டம் ஆரம்பமானபோது, மண்முனைப்பற்று பிரதேச காணி விவகாரம் பேசப்பட்டது.  இதனைத் தொடர்ந்து  இங்கு அரசியல்வாதிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அமளிதுமளிக்கு மத்தியில் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பிரதியமைச்சருமான  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் விநாயகமூர்த்த்தி முரளிதரன், முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .