2025 மே 01, வியாழக்கிழமை

பகலில் இடம்பெயர்ந்து இரவில் வீடு திரும்பும் சிகரம் கிராம மக்கள்

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரி.எல்.ஜவ்பர்கான்


கடுமையான வெயில் காலம் என்பதால் தகர கொட்டில்களுக்குள் இருக்கமுடியாது பகல் நேரங்களில் வேறு இடங்களுக்குச்சென்று இரவு நேரங்களில் மீண்டும் குடிசைக்குத்திரும்பும் பரிதாப நிலைக்கு ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சிகரம் சுனாமி குடியேற்ற கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சிகரம் சுனாமி குடியேற்ற கிராம மக்கள் கடந்த 2004 ஆம் சுனாமி அனர்தத்திற்கு பின்னர் தகரகொட்டில்களிலே வசித்து வருகின்றனர்.

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 10 வருடங்கள் ஆகின்ற போதும் இதுவரை மேற்படி கிராம மக்கள் 6 மாதகாலத்திற்காக அமைத்துகொடுக்கப்பட்ட தகரகொட்டில்களிலே வசித்து வருகின்றனர்.

65 குடும்பங்கள் வசித்து வரும் இக்கிராமம் எவ்வித அடிப்படை வசதிகளின்றி காணப்படுகின்றது.

பாடசாலை, வைத்தியசாலை உட்பட அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் தூர இடங்களுக்கே செல்லவேண்டியுள்ளதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போயை கடுமையான வெயில் காலத்தில் தகர கொட்டில்களுக்குள் இருக்கமுடியாது பகல் நேரங்களில் வேறு இடங்களுக்குச்சென்று இரவு நேரங்களில் மீண்டும் குடிசைக்குத்திரும்பும் பரிதாப நிலைக்கு ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சிகரம் சுனாமி குடியேற்ற கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே இவ்விடயம் தொர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .