2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் இரத்ததான முகாம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 18 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்


ஜனாதிபதியின் 68ஆவது பிறந்த தினத்தையொட்டி இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இளைஞர் அணி சிவானந்தியன் இளைஞர் கழகம் கல்லடி விளையாட்டுக்கழகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த பாரிய இரத்ததான முகாம் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மட்டக்களப்பு இளைஞர் அணி தலைவர் கே.சுஜான் தலைமையில் நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.மாவட்ட இராணுவ சிவில் இணைப்பதிகாரி மேஜர் நளின் ஹெட்டிகொட மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் தவகல் செயலாளர் கே.ஜீவானந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பெரும் எண்ணக்கைளிலான தமிழ் மக்கள் மற்றும் தமிழ் பெண்கள் படையினர் இரத்ததானம் செய்தனர். ஜனாதிபதியின் பிறந்த தினத்தையொட்டி பல்வேறு மத ஆலயங்களிலும் பிரார்த்தனைகளும் இடம் பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .