2025 மே 01, வியாழக்கிழமை

அரச காணிகளை வனப்பிரதேசமாக அறிவிப்பதை மீளாய்வு செய்ய கோரிக்கை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 20 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளமான அரச காணிகள் அனைத்தும் யாருக்கும் தெரியாமல் வனப்பிரதேசமாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்துவதை மீளாய்வு செய்ய வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக அரசாங்க அதிபரிடம் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரா. துரைரெட்ணம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2013.7.26ஆம் திகதி 1820ஃ-28 இலக்க அதிவிசேட வர்த்தமானி பிரசுரம் முலம்  சுற்றாடல், புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜெயந்த அவர்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகனேரி ஒதுக்குக்காடு -2583 ஹெக்டயர், தொப்பிக்கல் ஒதுக்குக்காடு 25256 ஹெக்டெயர், உன்னிச்சை ஒதுக்;குக்காடு 7334 ஹெக்டெயர், பனிச்சங்கேணி ஒதுக்குக்காடு 9303 ஹெக்டெயர், மொத்தமாக 44476 ஹெக்டெயர் (109855 ஏக்கர்) நிலப்பரப்பு மேற்படி வர்த்தமானி பிரசுரத்தின் மூலம் வனப்பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோரளைப்பற்று தெற்கு (கிரான்), கோரளைபற்று வடக்கு (வாகரை), மன்முனைமேற்கு (வவுணதீவு), ஏறாவூர்பற்று (செங்கலடி) ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த கால்நடைக்கான மேய்ச்சல்தரை காணிகள், மானாவாரி வயல்நிலங்கள், சேனைப்பயிர்செய்கை நிலங்கள், குடியிருப்புக் காணிகள் அடங்கலாக எல்லைகள் குறிப்பிடப்பட்டு பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் இக்காணிகளுக்குரிய நடவடிக்கைகள் யாவும் மாகாணசபை ஊடாக பிரதேச செயலாளர்களினால் நிர்வகிக்கப்படுவது தடுக்கப்பட்டு நேரடியாக மத்திய அரசின் கீழ் இயங்கும் வனத்திணைக்களத்தின் கீழ்  ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எக்காரணம் கொண்டும் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் இக்காணிகளை யாரும் கையாள முடியாது. இந்த நடவடிக்கை இம்மாவட்டத்தின் அரசாங்க அதிபரிலிருந்து பொதுமக்கள் பிரதிநிதிகள் யாருக்கும் தெரியாமல்  செய்யப்பட்டுள்ளது.

எனவே யுத்த காலத்திற்கு முன்பு இருந்து மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த காணிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அவை வழங்கப்பட்டு மீதமுள்ள காட்டுப் பிரதேசம் மாத்திரமே வனத்திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட வேண்டும்.

எனவே இதை மீள பரசீலனை செய்ய நடவடிக்கை எடுக்;க ஆவனம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .