2025 மே 01, வியாழக்கிழமை

போட்டே பிரதி இயந்திரம் கையளிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 20 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்துக்கு போட்டோ பிரதி இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரனின் நிதியொதுக்கீட்டில் இவ்; இயந்திரம்
கையளிக்கப்பட்டுள்ளது.

இதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (19)  பாடசாலை அதிபர் தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் கலந்துகொண்டார்.

இதன்போது, சுமார் ஒரு இலட்சத்து 40ஆயிரம் ரூபா பெறுமதியான போட்டோ பிரதி இயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் நிலையில் சித்திபெற்ற மாணவி தனுர்ஜாவின் கல்வி நடவடிக்கைக்காக தனது சொந்த நிதியிலிருந்து ஒரு தொகையை மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வழங்கிவைத்தார்.

பாடசாலை சமூகத்தினரால் மாகாணசபை உறுப்பினரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகக்கு அமைவாக இவ் இயந்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டதாக பாடசாலை அதிபர் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .